

ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் கால்பந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
ஹாங்காங்கின் பியோங்கியாங் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 68-வது நிமிடத்தில் சஸ்மிதா மாலிக்கும், ரதன் பாலா தேவி 70-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
பி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி ஏற்கெனவே பங் கேற்ற 3 ஆட்டங்களிலும் தோல் வியை சந்தித்த நிலையில் தற் போது ஆறுதல் வெற்றியை பெற் றுள்ளது. இதனால் 3 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
இந்த தொடரில் இந்திய அணி, வடகொரியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்திருந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ரதன்பாலா தேவி, இலக்கை நோக்கி அடித்த பந்தை ஹாங்காங் கோல்கீப்பர் லியங் வாய் அற்புதமாக தடுத்தார்.
அடுத்த 2-வது நிமிடத்தில் ஹாங்காங் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வீராங்கனை விங் ஹூம், அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேல்நோக்கி சென்று ஏமாற்றம் அளித்தது.
இதன் பின்னர் முதல் பாதியில் ஹாங்காங் வீராங்கனைகளின் தடுப்பு அரண்களை மீறி இந்திய வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் 2-வது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இரு கோல்களை இந்திய வீராங் கனைகள் அடித்து அசத்தினர்.