துபை ஓபனில் பட்டம் வென்றார் ஆன்டி முர்ரே

துபை ஓபனில் பட்டம் வென்றார் ஆன்டி முர்ரே
Updated on
1 min read

துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே பட்டம் வென்றார். ஏடிபி தொடரில் இவர் வென்ற 45-வது பட்டம் இதுவாகும்.

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் 35-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டஸ்கோவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 73 நிமிடங்களில் முடிவ டைந்தது.

துபை டென்னிஸ் போட்டியில் முர்ரே பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். கடைசியாக அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தொடரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். 25 வருட கால துபை டென்னிஸ் போட்டி வரலாற்றில் பட்டம் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஆன்டி முர்ரே.

இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி யில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, போலந்தின் மார்சின் மேட்கோவ்ஸ்கி ஜோடி 6-4, 3-6, 3-10 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் ஹோரியா, நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜர் ஜோடியிடம் தோல்வியடைந் தது.

நடால் தோல்வி

மெக்சிகோ ஓபன் இறுதி போட்டியில் ஸ்பெயினின் நடால் தோல்வியடைந் தார். 14 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற அவரை, 40-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஷேம் குயரே 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in