

ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் தோனி அறிவித்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதாவது:
கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக 6 மாதங்களுக்கு முன்போ, அல்லது ஒரு ஆண்டுக்கு முன்போ தோனி அறிவித்திருந் தால் நான் கவலைப் பட்டிருப்பேன். அப்போது விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு தயாராக இல்லை. இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்க, கோலி தயாராகிவிட்ட நிலையில் அப்பதவியில் இருந்து தோனி விலகியுள்ளார். சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக அவரை வணங்குகிறேன். இந்திய கிரிக்கெட்டின் மீது அவருக்கு உள்ள அக்கறையை இது உணர்த்துகிறது.
கேப்டன் என்ற முறையில் தோனி பல சாதனைகளை புரிந் துள்ளார். டி 20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என்று பல கோப்பைகளை அவர் வென்றுள்ளார். இதைவிட அவர் சாதிக்க வேறெதுவும் இல்லை. அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்ற வகையில் இன்னும் 2 ஆண்டுகளாவது ஆடக் கூடிய திறமை அவரிடத்தில் உள்ள தாக கருதுகிறேன். அணியின் வெற்றிக்கு தேவையான பங்க ளிப்பை அளிப்பதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.