

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கபடி போட்டியில் சென்னை, பெங்களூர் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான இந்தப் போட்டியில் நாடு முழுவதுமிருந்து 21 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் சென்னை அணி 33-11 என்ற கணக்கில் ஹிமாச்சல பிரதேசத்தையும், மும்பை அணி 24-14 என்ற கணக்கில் புதுச்சேரியையும், ஹரியானா 47-19 என்ற கணக்கில் டெல்லி அணியையும், பெங்களூர் அணி 19-17 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தையும் தோற்கடித்தன. பின்னர் நடைபெற்ற அரையிறுதியில் சென்னை அணி 35-20 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணாவையும், பெங்களூர் அணி 23-22 என்ற கணக்கில் மும்பை அணியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.