Published : 30 Mar 2017 10:18 AM
Last Updated : 30 Mar 2017 10:18 AM

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு பிரேசில் தகுதி: பொலிவியாவிடம் வீழ்ந்தது அர்ஜென்டினா

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடை பெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி பெற்றது.

தென் அமெரிக்க கண்டங் களுக்கு இடையிலான தகுதி ஆட்டம் ஒன்றில் தனது சொந்த மண்ணில் பிரேசில் அணி நேற்று பராகுவே அணியை எதிர்த்து விளையாடியது. 33-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோலை அடித்தது.

பவுலின்கோ உதவியுடன் இந்த கோலை கோடின்ஹோ அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரேசில் 1-0 என முன்னிலை வகித்தது. 53-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கேப்டன் நெய்மர், இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த பந்தை பராகுவே கோல்கீப்பர் அந்தோனி சில்வா அருமையாக தடுத்தார்.

எனினும் அடுத்த 11-வது நிமிடத்தில் நீண்ட தூரத்தில் பந்தை பெற்ற நெய்மர் கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிவடைய 6-வது நிமிடங்கள் உள்ள நிலையில் பிரேசில் அணி 3-வது கோலை அடித்தது. இந்த கோலை மார்செலோ அடித்தார். முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் உருகுவே 1-2 என்ற கோல் கணக்கில் பெரு அணியிடம் வீழ்ந்தது. உருகுவே அணியின் தோல்வி காரணமாக பிரேசில் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. 5 முறை சாம்பியனான பிரேசில் தகுதி சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக 8-வது வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி 33 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் பிரேசில், தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து முதல் அணியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த கண்டத்தில் உள்ள 10 அணிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். தற்போதைய நிலையில் பிரேசில் (33), கொலம்பியா (24), உருகுவே (23), சிலி (23) ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. எல்லா அணிகளுக்கும் இன்னும் 4 ஆட்டங்கள் மீதம் உள்ளன.

இந்த ஆட்டங்களில் பிரேசில் அணி தோல்வியை சந்தித் தாலும் முதல் 4 இடத்துக்குள் ளேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை யில் அர்ஜென்டினா அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. அந்த அணி தற்போது 22 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

நேற்று பொலிவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அந்த அணி தரப்பில் ஆர்ஸ் 31-வது நிமிடத்திலும், மார்செலோ மார்ட்டின்ஸ் 53-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி களமிறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் சிலி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது களநடுவரை தவறான வார்த்தைகளால் திட்டியதற்கா கவும், போட்டி நிறைவடைந்த பிறகு அவருக்கு கை கொடுக்காமல் அவமதிப்பு செய்ததற்காகவும் மெஸ்ஸிக்கு 4 ஆட்டங்களில் விளையாட பிபா தடைவிதித் துள்ளது.

இந்த தடையானது பொலிவி யாவுக்கு எதிரான ஆட்டம் தொடங்கு வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. தனக்கு பவுல் கொடுத்த காரணத்துக்காக பிரேசில் நாட்டை சேர்ந்த நடுவருக்கு எதிராக மெஸ்ஸி நடந்து கொண்ட விதத்தை சிவப்பு அட்டை குற்றமாக கருதி இந்த தண்டனையை அறிவித்துள்ளது பிபா.

அர்ஜென்டினா அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. அந்த அணி உருகுவே, வெனிசுலா, பெரு, ஈக்வேடார் ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. இந்த ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தால் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x