

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ‘பவுலிங்கின் டான் பிராட்மேன்’ என்று வர்ணித்தது குறித்து பெருமையாக உள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
“உலகின் மிகச்சிறந்த வீரரான பிராட்மேன் என்ற லெஜண்டுடன் என்னை இன்னொரு லெஜண்ட் (ஸ்டீவ் வாஹ்) ஒப்பிட்டது உண்மையில் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்தபட்ச கவுரமாகும்.
நான் ஸ்டீவ் வாஹ் கேப்டன்சியை மிகவும் நேசிப்பவன். அவரைப் பார்த்து வளர்ந்தவன் நான். மற்ற கேப்டன்களுக்கு ஸ்டீவ் வாஹ் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவர். அவர் எனக்கு அளித்த புகழாரம் தக்கவைக்கக் கடினமானது ஆனாலும் எனது ஆட்டத்திறனை மேலும் உயர்த்த இது நிச்சயம் பயன்படும்” என்று அஸ்வின் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.