தோல்வியடைந்தது ஏமாற்றமாக உள்ளது: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

தோல்வியடைந்தது ஏமாற்றமாக உள்ளது: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.

ராகுல் திரிபாதி 45, ரஹானே 38, மனோஜ் திவாரி 22, ஸ்மித் 17, பென் ஸ்டோக்ஸ் 17, தோனி 7 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து 161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணியால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 58 ரன்கள் சேர்த்தார். ஜாஸ் பட்லர் 17, நிதிஷ் ராணா 3, பார்த்தீவ் படேல் 33, கரண் சர்மா 11, பொலார்டு 9, ஹர்திக் பாண்டியா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை ரோஹித் சர்மா சிக்ஸருக்கு விளாசினார்.

3-வது பந்தை உனத்கட் மிகவும் அகலமாக வீசினார். ரோஹித் சர்மா முறையிட்ட போதும் நடுவர் வைடு கொடுக்க மறுத்தார். 4-வது பந்தை ரோஹித் சர்மா தூக்கி அடிக்க அது உனத்கட்டிடமே கேட்ச்சாக மாறியது. கடைசி பந்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸர் விளாசிய போதும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

மும்பை அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அதேவேளையில் புனே அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “இறுதிக் கட்டத்தில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். பென் ஸ்டோக்ஸ், உனத்கட் ஆகியோர் நிதானமாக செயல்பட்டனர். ஆடுகளம் 40 ஓவர்களுக்கும் ஒரே மாதிரியாகவே செயல் பட்டது. வழக்கமான வான்கடே ஆடுகளம் போல் இது இல்லை” என்றார்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “மிக நெருங்கி வந்து தோல்வியை தழுவியது ஏமாற்றமாக உள்ளது. எங்களால் முடிந்தவரை போராடி னோம், ஆனால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது ஏமாற்றம்தான். எங்கள் செயல் திறனை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆட்டத்தின் நடுப்பகுதியில் விக்கெட்களை இழந்ததுதான் நாங்கள் செய்த தவறு. எனினும் ஒட்டுமொத்தமாக இந்த ஆட்டம் சிறப்பாகவே அமைந்தது. ஆடுகளம் உலர்ந்திருந்ததால் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுத் தது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர்.

வான்கடே மைதானத்தில் வேகப்பந்து வீச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சிறந்த கிரிக் கெட்டை விளையாடி வருகிறோம். தோல்வியை மறந்து இதில் இருந்து அடுத்த ஆட்டத் துக்கு முன்னேறிச் செல்வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in