

இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தில் 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளின் போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த வியாழக் கிழமை தொடங்கிய இந்த ஆட்டம் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க வீரர் லியான் ஜான்சன் 9 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங் கிய டேரன் பிராவோ 10 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டு ஆனார். பிறகு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
முதல் ஆட்டத்தின் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 32, மார்லோன் சாமுவேல்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் 2-வது நாள் ஆட்டம் மழை காரண மாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.