மற்றொரு தாயிடமிருந்து கிடைத்த என் சகோதரன் தோனி: பிராவோ

மற்றொரு தாயிடமிருந்து கிடைத்த என் சகோதரன் தோனி: பிராவோ
Updated on
1 min read

மற்றொரு தாயிடமிருந்து கிடைத்த என் சகோதரன் எம்.எஸ்.தோனி என்று மேற்கித்திய தீவுகளின் அணி வீரர் பிராவோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேற்கித்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ ஐபிஎல் போட்டிகளின் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் மிக நெருக்கமான நட்பில் உள்ளவர்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்கிஸில் பிராவோ விளையாடியபோது அவருக்கும் தோனி மற்றும் ரெய்னாவுக்கும் இடையேயான நட்பு ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது.

பிராவோவின் இந்த நட்பு மேற்கித்திய தீவுகளில் இந்திய அணியின் சுற்றுப்பயணத்திலும் எதிரொலித்துள்ளது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரிய வெற்றியைப் பெற்றது.

இதற்கிடையில் மேற்கத்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ, இந்திய கிரிக்கெட் வீரர்களை தன் இல்லத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பிராவோவின் அழைப்பில், தோனி விராட் கோளி, ஷிகர் தவன், புவனேஷ்வர், ரஹானே ஆகியோர் சென்றுள்ளனர். இதில் தோனியுடன் அவரது மகள் ஸிவா தோனியும் வந்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் அவரது இஸ்டர்கிராம் பக்கத்தில் பிராவோ வெளியிட்டுள்ளார். குறிப்பாக தோனியுடன் பிராவோ மற்றும் அவரது அம்மா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிராவோ அதில், மற்றொரு தாயிடமிருந்து எனக்கு கிடைத்த என் சகோதரன் நேற்றிரவு எனது இல்லத்தில் அவரது அழகான மகளுடன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பிராவோ -- தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன் பிராவோ, தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எனது மச்சானை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in