

4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது, இதற்கான வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
பிரண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா ஆகியோர்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வர்ணனையில் அறிமுகமாகின்றனர். பாண்டிங், ஸ்மித் இருதரப்பு தொடரில் வர்ணனை செய்துள்ளனர், சாம்பியன்ஸ் டிராபியில் இதுவே முதல் முறை.
மேலும் சஞ்சய் மஞ்சுரேக்கர், சவுரவ் கங்குலி, இயன் பிஷப், ஷான் போலக், ஷேன் வார்ன், ரமீஸ் ராஜா, அதார் அலி கான், மைக்கேல் ஸ்லேட்டர், நாசர் ஹுசைன், மைக்கேல் ஆர்த்தர்டன், சைமன் டூல் ஆகியோர் உள்ளனர்.
ஜூன் மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி 17 நாட்கள் நடைபெறும். 2013-ல் தோனி தலைமையில் இந்தியா மேலும் ஒரு மகுடமாக கோப்பையை வென்றது, தற்போது அதைத் தக்கவைக்க போராட வேண்டும். விராட் கோலிக்கு இந்தப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் மார்க் நிகலஸ், ஹர்ஷா போக்ளே, டேவிட் லாய்ட் போன்றோர் இல்லாதது வர்ணனையில் ஆர்வத்தை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.