Last Updated : 29 Jun, 2017 10:27 AM

 

Published : 29 Jun 2017 10:27 AM
Last Updated : 29 Jun 2017 10:27 AM

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடருமா?

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் மிகுந்த நம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கின்றனர்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வென்றது. இந்நிலையில் இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து இந்திய அணி ஆடவுள்ளது.

இத்தொடரின் முதல் ஆட்டத் தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்திய இந்திய அணி, இங்கி லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்பட்டனர். மேலும் மந்தனா, பூனம் ராவத், மிதாலி ராஜ் ஆகிய 3 முன்னணி வீராங்கனைகளும் அரைசதம் அடித்தனர். இது இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரித் துள்ளது.

இன்றைய ஆட்டத்திலும் அதே போன்ற பேட்டிங்கை இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத் தினால் அது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கடும் சவாலாக இருக்கும். குறிப்பாக கடந்த 7 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்துள்ள இந்திய கேப்டன் மிதாலி ராஜை கட்டுப்படுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

பேட்டிங்கைப் போலவே பந்து வீச்சு துறையிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. மகளிர் கிரிக் கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ஜுலன் கோஸ்வாமி தலைமை யில் இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கிந்தியத் தீவுக்கு சவால் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தங்கள் முதல் போட்டியில் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, இன்றைய போட்டி யில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்குகிறது. சமீபத்திய கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருப்பது அந்த அணிக்கு நெருக்குதலை அதிகப்படுத்தி உள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், பூனம் ராவத், தீப்தி சர்மா, ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், சுஷ்மா வர்மா, மன்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், நுசாட் பர்வீன்.

மேற்கிந்திய தீவுகள்: ஸ்டபைன் டெய்லர், மரிஸ்ஸா, ரெனிஸ் பாய்ஸ், ஷமிலா கோனல், ஷானெல் டாலே, டாட்டின், அபி பிளெட்சர், கியானா ஜோசப், கிஷோனா நைட், ஹைலே மேத்யூஸ், அனிசா மொஹமட், சேடியன் நேஷன், அகிரா பீட்டர்ஸ், ஷகேரா செல்மான், பெலிஷியா வால்டர்ஸ்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x