ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்தியா

ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்தியா
Updated on
1 min read

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் 2-வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வென்றது. இந்நிலையில் வியாழக்கிழமை மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி எதிர் கொண்டது.

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் தரப்பில் தீப்தி, பூனம், ஹர்மன்பிரித் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானல் டேலே 33 ரன்களும், அஃபி 36 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக பூனமும், ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர். இதில் ரன் ஏதும் எடுக்காமல் பூனம் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா

இந்தியாவின் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிட ஸ்மிருதி மந்தனா, இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி சதம் விளாசினார். இதில் 12 பவுண்டிரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

ஸ்மிருதி மறுமுனையில் தோல் கொடுத்த மித்தாலி ராஜ் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 43-வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

ஸ்மிருந்தி மந்தனா மற்றும் மோனா மெஷ்ரம் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in