Published : 06 Jan 2014 11:08 AM
Last Updated : 06 Jan 2014 11:08 AM

டெஸ்ட் தரவரிசை: 3-வது இடத்துக்கு முன்னேறியது ஆஸி.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா 10 தரவரிசைப் புள்ளிகளை வென்றது.

இதன் மூலம் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை ஆஸ்திரேலியா பிடித்தது. டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 6 புள்ளிகளே வித்தியாசம் உள்ளது.

ஆஷஸ் தொடரில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து 9 புள்ளிகளை இழந்து, 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. ஆஷஸ் தொடரில் தொடர்ந்து 4-வது வெற்றியைப் பெற்றபோது, தரவரிசைப் பட்டியலில் 4-வது இடம் பிடிப்பதை ஆஸ்திரேலியா உறுதி செய்தது. 5-வது போட்டியிலும் வெற்றி பெற்றதால், 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. இங்கி லாந்து அணி இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணி நியூஸிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஏற்படும் வெற்றி தோல்விக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலில் அடுத்த கட்ட மாற்றம் இருக்கும். -பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x