Published : 03 Jan 2016 12:28 PM
Last Updated : 03 Jan 2016 12:28 PM

தெற்கு ஆசிய கால்பந்து இறுதிப் போட்டி: இந்தியா - ஆப்கன் இன்று மோதல்

தெற்கு ஆசிய கால்பந்து பெட ரேஷன் கோப்பை இறுதிப்போட்டி யில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

திருவனந்தபுரத்தில் நடை பெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் இலங்கையை 2-0 என்ற கோல் கணக்கிலும், நேபாளத்தை 4-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தது. அரையிறுதியில் மாலத்தீவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆப்கானிஸ்தான் லீக் ஆட்டங்களில் 4-0 என்ற கணக்கில் வங்கதேசத்தையும், 3-0 என்ற கணக்கில் பூடானையும், 4-1 என்ற கோல் கணக்கில் மாலத்தீவையும் வீழ்த்தியிருந்தது. அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் இலங்கையை பந்தாடியிருந்தது.

6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி கடந்த 2011ல் டெல்லியில் நடைபெற்ற தொடரில் ஆப்கானிஸ்தானை 4-0 என தோற்கடித்து கோப்பை வென்றது. கேப்டன் சுனில் ஷேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இந்த தோல்விக்கு 2013ல் ஆப்கானிஸ் தான் பதிலடி கொடுத்தது. இறுதிப் போட்டியில் 2-0 என இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்றது.

இந்திய அணியில் சுனில் ஷேத்ரி, லாலியன் ஸூவால, ஹாலிஷரன், ஜிஜி நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர்.

ஆப்கன் அணியில் ஹைபர் அமணி இந்த தொடரில் 5 கோல்கள் அடித்துள்ளார். இந்த அணி தாக்குதல் ஆட்டம் நடத்தக்கூடியது. உலககோப்பை தகுதி சுற்றில் அடைந்த படுதோல்விகளுக்கு ஆறுதலாக இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முழு முயற்சியுடன் இந்திய அணி களம் காண்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x