Published : 11 Jun 2016 09:48 AM
Last Updated : 11 Jun 2016 09:48 AM

கோபா அமெரிக்கா கால்பந்து: மெக்சிகோ காலிறுதிக்கு முன்னேற்றம்

ரோஸ் பவுல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் மெக்சிகோ-ஜமைக்கா அணிகள் மோதின. இதில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மெக்சிகோவின் ஜீசஸ் மானுவல் கொரோனாவிடம் கிராஸை பெற்ற ஜேவியர் ஹெர்னான்டஸ் தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ முதல் பாதியில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

81-வது நிமிடத்தில் மெக்சிகோ 2-வது கோலை அடித்தது. இந்த கோலை ஓர்பி பெரால்டா அடித்தார். ஜமைக்கா அணி வெற்றி பெற்றதில் அந்த அணியின் கோல் கீப்பர் கில்லர்மோ ஒஹொவா முக்கிய பங்கு வகித்தார்.

அவர் ஜமைக்கா அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளை 3 முறை தகர்த்தார். ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே ஜமைக்கா அணிக்கு கோல் அடிக் கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வீரர் கிளேடன் டெனால்டு சன் அடித்த பந்து கோல் கம்பத் துக்கு வெளியே சென்றது. முதல் பாதியில் மேலும் இரு வாய்ப்புகள் ஜமைக்காவுக்கு கிடைத்தன.

35-வது நிமிடத்தில் கிராத் மெக்லியரி கோல் கம்பத்தை நோக்கி உதைத்த பந்தை கீப்பர் கில்லர்மோ ஒஹொவா அருமையாக தடுத்தார். 39-வது நிமிடத்தில் மைக்கேல் ஹெக்டர் துல்லியமாக இலக்கை நோக்கி அடித்த பந்தையும் கில்லர்மோ தடுத்து மெக்சிகோ அணிக்கு பலம் சேர்த்தார். 83-வது நிமிடத்திலும் ஜமைக்கா அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டு கட்டை போட்டார் கில்லர்மோ.

முதல் ஆட்டத்திலும் மெக்சிகோ வெற்றி பெற்றிருந்ததால் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் மெக்சிகோ வரும் 14-ம் தேதி வெனிசுலாவுடன் மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x