

கோடிக்கணக்கான மக்கள் கிரிக்கெட் மீதான மோகத்தில் மிதந்த காலம் தற்போது மெல்ல மெல்ல மாறத் தொடங்கி உள்ளது. ரசிகர்களின் மனது தற்போது கால்பந்து, பாட்மிண்டன், கபடி, வாலிபால் ஆகியவற்றின் மீதும் திரும்பி உள்ளது. இவற்றில் முக்கியமாக கடந்த 3 ஆண்டுகளாக கால்பந்து போட்டியானது தமிழக ரசிகர்கள் அதிலும் சென்னை வாசிகளின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரங்களான மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட வீரர்களின் பெயர்களை உலகக் கோப்பை போட்டிகளின் போதோ, ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளின் போதோ தொலைக்காட்சிகளில் பார்த்து ஆர்ப்பரிக்கும் சென்னைவாசிகள் மென்டி, சோனி நார்டி, டிகோ புளோரன், எலானோ புளூமர், இயன் ஹூமி, மென்டோசா உள்ளிட்ட மற்ற வெளிநாட்டு வீரர்களின் பெயரையும் தற்போது அறிந்துள்ளார்கள்.
இந்தியாவை பொறுத்த வரையில் கேரளா, மேற்கு வங்கம், கோவா, அசாம் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில மாநிலங்களில் மட்டுமே கால்பந்து போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்ட நிலையில் தற்போது தமிழ கத்திலும் கால்பந்து அதன் வேரை ஆழமாக ஊன்ற தொடங்கி உள்ளது.
ஐஎஸ்எல் தொடரில் உருகுவே, பிரேசில், நைஜீரியா, கொலம்பியா, பராகுவே, பிரான்ஸ், அர்ஜென் டினா, ஹைதி என உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் வீரர்கள் பறந்து பந்து சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடு கின்றனர்.
சர்வதேச அளவிலான வீரர்கள் சென்னையில் வந்து விளையாடும் அதே சூழ்நிலையில் போட்டிகள் நடத்துவதற்கு பெரிதும் நம்பி இருப்பது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இருக்கும் நேரு விளையாட்டரங்கம் தான். சுமார் 40 ஆயிரம் பேர் அமர்ந்து இங்கு போட்டியை ரசிக்கலாம்.
அரசின் கட்டுப்பாட்டில் இந்த மைதானம் இயங்கி வந்தாலும் இங்கு போட்டியை நடத்துவதற்கான கட்டணம் மாறுபட்டே காணப்படு கிறது. பள்ளிகள் தரப்பில் இங்கு போட்டிகளை நடத்துவதற்கு ஒருநாள் கட்டணாக ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பார்க்கிங் கட்டணமாக ரூ.5 ஆயிரமும் கட்டவேண்டும்.
அதேவேளையில் கல்லூரி தரப்பில் போட்டிகளை நடத்தினால் ஒருநாள் கட்டணமாக ரூ.15 ஆயிரம், பார்க்கிங் கட்டணம் ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். பகலில் போட்டிகளை நடத்தினால் மட்டுமே இந்த கட்டணம்.
மின்னொளியில் போட்டிகளை நடத்தினால் அதற்கு கூடுதல் செலவாகும். மைதானத்தில் உள்ள உயர்மின் கோபுர விளக்குகளுக்கு ஒரு மணி நேர கட்டணமாக ரூ.25 ஆயிரம் வரை கட்ட வேண்டும். இந்த இருதரப்பினருக்கும் குறைந்த பட்ச கட்டணங்களாக இதுவே உள்ளது.
ஆனால் கிளப் அளவில் போட்டி களை நடத்தினால் மைதானத்தின் வாடகையானது ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் போட்டிகளை காண டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டால் ஒரு நாள் போட்டியை நடத்துவதற்கான கட்டணம் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. சமீபத்தில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் அணிகளும் இதே வாடகையையே செலுத்தியதாக மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, “விதிமுறைகளின் படிதான் நாங்கள் கட்டணம் பெறுகிறோம். அதுவும் சிறிய அளவிலான போட்டி களுக்கே நாங்கள் நேரடியாக கட்டணம் பெறுகிறோம். பெரிய அளவிலான போட்டிகளுக்கு எஸ்டிஏடி மற்றும் தலைமை செயலகம் வழியாகவே ஒப்புதல் பெறமுடியும்’’ என்றார்.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி களை தொடர்ந்து சென்னை நகரில் ஐ லீக் கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த தொடரில் களமிறங்கும் சென்னை அணியில் கடலூர், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் களமிறங்குகின்றனர்.
கால்பந்து உலகில் நமது மண்ணின் மைந்தர்கள் சிறப்பாக செயல்படவும் அதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு செல்லவும் உள்ளூரில் நடத்தப்படும் இந்த கால்பந்து தொடர் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும்.
தமிழக வீரர்கள் பெரும்பாலா னோர் விளையாடும் சூழ்நிலையில் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசு கைகொடுத் தால் வீரர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
போட்டி கட்டணம், பராமரிப்பு செலவு உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு சற்று சலுகை வழங்கும் பட்சத்தில் தமிழக கால்பந்து வீரர்களும் உலகத்தரத்துக்கு செல் வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.