கோபா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்கா - ஈக்வேடார் காலிறுதியில் இன்று மோதல்

கோபா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்கா - ஈக்வேடார் காலிறுதியில் இன்று மோதல்
Updated on
1 min read

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் போட்டியை நடத்தும் அமெரிக்கா, நடப்பு சாம்பியன் சிலி, தொடரை இம்முறை வெல்லக்கூடிய அணியாக கருதப்படும் அர்ஜென்டினா, மெக்சிகோ, பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வேடார், ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

15 முறை சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே, 8 முறை மகுடம் சூடிய பிரேசில் ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. இந்நிலையில் பரபரப்பான காலிறுதி சுற்று இன்று தொடங்குகிறது. வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா - ஈக்வேடார் அணிகள் மோது கின்றன.

ஏ பிரிவில் இடம் பெற்றி ருந்த அமெரிக்க அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கொலம்பியாவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியது. 2-வது ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை 4-0 என்ற கோல் கணக்கிலும், கடைசி ஆட்டத்தில் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வென்று அசத் தியது.

அதேவேளையில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஈக்வேடார் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக கோலின்றி டிராவில் முடித்திருந்தது. பெரு அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த நிலையில் கடைசி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வீழ்த்தியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in