

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செய லாளர் ஆர்.ஐ.பழனி நேற்று திரு நெல்வேலியில் கூறியதாவது:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதன்முறையாக தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழக கிரிக் கெட் வீரர்களுக்கு, தேசிய அள விலான டி 20 போட்டிகளில் விளை யாட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக் கவும், கிராமங்களில் உள்ள வீரர் களுக்கு டி 20 அளவிலான போட்டி களில் விளையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் இப் போட்டி நடத்தப்படுகிறது. வீரர் களை ஊக்கப்படுத்தி, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும், மாவட்டங்களில் தேசிய போட்டிகளை நடத்த மைதானங் களை தயார்படுத்தவும் இந்த தொடர் உதவும்.
8 அணிகள் தேர்வு
அணிகளை தேர்வு செய்ய அழைப்பு விடுத்ததில், 22 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, அதில் 17 நிறுவனங்கள் கலந்து கொண் டன. அதிக தொகைக்கு ஏலம் கேட்கப்பட்ட தூத்துக்குடி, தென் சென்னை, கோவை, மதுரை, காஞ்சி புரம், திருவள்ளூர், திண்டுக்கல், காரைக்குடி ஆகிய 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை 10 ஆண்டுகளுக்கு போட்டிகளில் கலந்துகொள்ளும்.
ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை போட்டித் தொடர் நடைபெற வுள்ளது. இதற்கான தொடக்கவிழா சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு பிரமியர் லீக் முதல் ஆண்டில் பகல், இரவு போட்டிகளாக 31 போட்டிகள் நடைபெறும்.
8 அணிகளும் ரவுண்ட்ராபின் முறையில் விளையாடும். இப் போட்டிகள் சென்னை, திண்டுக் கல் (என்பிஆர் கல்லூரி நத்தம்) மற்றும் திருநெல்வேலி (இந்தியா சிமென்ட், சங்கர் நகர்) கிரிக் கெட் மைதானங்களில் நடைபெற வுள்ளன. அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெறும்.
வீரர்கள் தேர்வு முறை
இப்போட்டிகளில் 8 அணிக ளுக்கும் மொத்தம் 170 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். வீரர்கள் தேர்வு இந்த மாத இறுதியில் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 951 வீரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங் களில் பதிவு செய்து விளையாடும் வீரர்கள் மட்டும் இந்த போட்டிகளில் விளையாட தகுதியானவர்கள். போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் அஸ்வின், விஜய் ஆகியோரும் பங்கேற்பார்கள்.
கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், 3, 4 வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தித் தொடர்பாளர் ஆர்.என்.பாபா, திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.முரளி ஆகியோர் உடனிருந்தனர்.