

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றில், சீனாவின் முன்னணி வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான லின் டானை வீழ்த்தி, இந்தியாவின் இளம் வீரர் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்.
சீனாவின் புஸாவ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஒலிம்பிக்கில் இரு முறையும், உலக சாம்பியன் ஷிப்பில் 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்ற லின் டானை ஸ்ரீகாந்த் சந்தித்தார்.
மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்ரீகாந்த் 21-19, 21-17 என்ற நேர் செட்களில் லின் டானை வீழ்த்தி சரித்திர வெற்றியைப் பதிவு செய்தார்.
இது, ஸ்ரீகாந்த் வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி இருக்கிறார். லின் டான் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ஸ்ரீகாந்த், உலக பாட்மிண்டன் தரவரிசையில், மூன்று இடங்கள் முன்னேற்றம் காண்பார் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, இந்தியாவின் சாய்னா நேவால் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை வீழ்த்தி, தனது முதல் சீன ஓபன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.