Published : 15 Jul 2016 09:30 AM
Last Updated : 15 Jul 2016 09:30 AM

புட்ஸால் கால்பந்து இன்று தொடக்கம்: சென்னை - மும்பை மோதல்

பிரீமியர் லீக் புட்சால் கால்பந்து தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத் தில் சென்னை அணி மும்பையை எதிர்த்து விளையாடுகிறது. மற் றொரு ஆட்டத்தில் ரொனால்டினோ வின் கோவா அணி கொல் கத்தாவை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, கோவா, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, கொச்சி என 6 அணிகள் பங்கேற்கின்றன. உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

5 வீரர்கள் மட்டுமே களத்தில் உள்ள இந்த வகை கால்பந்து தொடரில் சென்னை அணிக்கு பிரேசில் வீரர் பால்கோ நட்சத்திர வீரராக உள்ளார். கோவா அணிக்கு பிரேசில் ஜாம்பவான் ரொனால் டினோ, கொல்கத்தா அணிக்கு அர்ஜென்டினா முன்னாள் சூப்பர் ஸ்டார் ஹெர்னன் கிரேஸ்போ, கொச்சி அணிக்கு ஸ்பெயின் முன் னாள் வீரர் சல்காடோ, மும்பை அணிக்கு மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் கேப்டன் ரேயான் கிக்ஸ், பெங்களூரு அணிக்கு மான்செஸ் டர் யுனைடெட் ஜாம்பவான் பால் ஸ்கோல்ஸ் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளனர்.

போர்ச்சுகல் ஜாம்பவான் டெக் கோ காயம் காரணமாக கடைசி நிமிடத்தில் தொடரில் இருந்து விலகியுள்ளார். சென்னை அணியை இந்து குழுமம் வாங்கி யுள்ளது. மும்பை அணி டி.சி. டிசைனுக்கு செந்தமானது. கொல்கத்தா அணியை கிராஸ்ரூட் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. நடிகர் புனித்குமார் பெங்களூரு அணியையும், ஈஎஸ் என்டர்டெயின்ட்மன்ட் நிறுவனம் கொச்சி அணியையும், கோவா அணியை வைகிங் மீடியா நிறுவனமும் வாங்கியுள்ளன.

பிரிமீயர் புட்சாலில் ஏ பிரிவில் சென்னை , மும்பை, கொச்சி அணிகளும், பி பிரிவில் கொல்கத்தா, பெங்களூரு, கோவா அணிகளும் இடம் பெற்றுள்ளன. சென்னை நேரு உள்ளரங்க மைதானத்தில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. போட்டியை சோனி சிக்ஸ், சோனி இஎஸ்பிஎன் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் கோவா, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

நாளை மும்பை -கொச்சி, கொல் கத்தா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 17-ம் தேதி கொச்சி -சென்னை, பெங்களூரு- கோவாஅணிகள் சந்திக்கின்றன. தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் கோவாவில் நடத்தப்படுகிறது. 18-ம் தேதி ஓய்வு நாளாகும். 19-ம் தேதி கொல்கத்தா - கோவா, மும்பை - சென்னை அணிகளும், 20-ம் தேதி பெங்களூரு - கொல்கத்தா, கொச்சி - மும்பை அணிகளும், 21-ம் தேதி கோவா - பெங்களூரு, கொச்சி - சென்னை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டங்கள் அனைத்தும் கோவாவில் உள்ள பெட்டெம் விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.

லீக் சுற்றுகளின் முடிவில் இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் தலா இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி ஆட்டங் கள் 23-ம் தேதி, இறுதிப்போட்டி 24-ம் தேதியும் கோவாவில் நடை பெறுகிறது. 8 நாட்கள் நடைபெ றும் இந்த தொடரில் 14 மொத்தம் ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ் வொரு அணியிலும் ஒரு நட்சத்திர வீரர், சர்வதேச புட்ஸால் வீரர்கள் 7 பேர் மற்றும் 5 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னை அணி புட்ஸால் கால்பந்தின் பீலே என வர்ணிக்கப்படும் பால்கோ தலைமையில் இந்த தொடரை சந்திக்கிறது.

சென்னை அணி:

பால்கோ (கேப்டன்), ஸ்பின்டோலா (கோல் கீப்பர்), வம்பீட்டா, புல்லா, ரியான், ஹெம்னி, சீயன் (புட்ஸால் வீரர் கள்), பராஸ் அப்துல், யாஷ், யூனுஸ் பாஷா, ரோஹித் சுரேஷ், அனுபம் (இந்திய வீரர்கள்).

மும்பை அணி:

ரேயான் கிக்ஸ் (கேப்டன்), லூயிஸ் அமடா, போக் லியா, ஏஞ்சலோட், கெவின், பெட் ரிகோ பெரஸ், பேப்லா(சர்வதேச புட்ஸால் வீரர்கள்), ஷாய் நிகில், ஜோ பால் பென்ஸ் (கோல் கீப்பர்), முகமது அதிஷம் அலி, சுபம் மானே, ஷன்பிரித் (இந்திய வீரர்கள்).

புட்ஸால் என்றால் என்ன?

புட்ஸால் போட்டியில் ஒரு அணி யில் மொத்தம் 12 வீரர்கள் இருப் பார்கள். ஆனால் களத்தில் கோல் கீப்பர் உட்பட 5 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள். எத்தனை மாற்று ஆட்டக்காரரை வேண்டு மானாலும் களம் இறக்கிக் கொள் ளலாம். ஆனால் களத்தில் 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

உள்ளரங்க மைதானத்தில் மட்டுமே போட்டி நடைபெறும். கோல் கம்பம் மற்றும் பந்து வழக் கத்தை விட சிறிய அளவில் இருக் கும். முதல் பாதி 20 நிமிடம் அடுத்த பாதி 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடங்கள். 15 நிமிடங்கள் இடை வேளை வழங்கப்படும். ஆப்சைடு கிடையாது, பேக் பாஸ் ஒரு முறைதான் செய்ய வேண்டும். சிவப்பு அட்டை வழங்கப்பட்டால் 2 நிமிடம் கழித்து மற்றொரு வீரரை களமிறக்கிக் கொள்ளலாம். கோல் கீப்பர் பந்தை 4 விநாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்கக்கூடாது. அதேவேளையில் எதிரணி பகுதி யில் சென்றும் இவர் விளையாட லாம். போட்டி டிரா ஆனால் கூடுதல் நேரம் அல்லது பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x