

அர்ஜுனா விருது அளிக்கப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அர்ஜுனா விருது வழங்கப்படும்போது எழும் சர்ச்சைகளைத் தடுக்கும் வகையில் விளையாட்டு அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் (கோடைகாலம், குளிர்காலம் மற்றும் பாரா ஒலிம்பிக்) போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது பெறுவதற்கு 90 சதவீதம் தகுதியானவர்கள் ஆகிவிடுவார்கள்.
இதற்கு அடுத்தபடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலகக் கோப்பை போட்டிகளிலும் சாதிப்பவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேபோல வீராங்கனைகள் மற்றும் உடல்ஊனமுற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் விளையாட்டு விருதுகளில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.