ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியா

ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியா
Updated on
1 min read

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா அரை இறுதியில் போட்டியை நடத்தும் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரஞ்ஜித் சிங் 11-4, 5-11, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஷன் ஹி ஹோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் வேலவன் செந்தில்குமார் 13-11, 11-13, 11-5, 8-11, 11-5 என்ற நேர் செட் கணக்கில் லாய் சவுக் நாமை வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவை எதிர்த்து விளையாட உள்ளது. மலேசிய அணி அரை இறுதியில் பாகிஸ்தானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

மகளிர் பிரிவில் 5 முதல் 9 இடங்களுக்கான ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவின் சான்யா 11-6, 11-9, 11-4 என்ற செட் கணக்கில் வான் சாங்கை வீழ்த்தினார். மற்ற ஆட்டங் களில் ஐஸ்வர்யா பட்டாச்சார்யா 9-11, 11-8, 6-11, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் யோஜூ சியோவிட மும், வேதிகா அருண் 9-11, 8-11, 6-11 என்ற நேர் செட்டில் டாங்க் ஜூ சாங்கிடமும் தோல்வியடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in