

ஐபிஎல் 10-வது சீசனுக்கான ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.14.50 கோடிக்கு புனே ரைசிங் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெரு மையை பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.
முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்தாவது:
தோனி, ஸ்மித் ஆகியோ ருடன் இணைந்து விளையாட ஆர்வமாக உள்ளேன். ஓய்வ றையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது சிறப்பான விஷய மாக இருக்கும். தோனி, ஸ்மித் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக திகழக்கூடிய வர்கள். ஸ்மித்துக்கு எதிராக நான் சிலசமயங்களில் வார்த்தை போரில் கூட ஈடுபட்டுள்ளேன். தற்போது அவருடன் ஒரே அணி யில் இணைந்து விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அவர் ஒரு அற்புதமான வீரர். எனக்கு பிடித்த ஆடுகளங்களில் புனேவும் ஒன்று.
ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இங்கு விளையாடினேன். தற்போது மீண்டும் இந்த மைதானத்துக்கு திரும்பி வருகிறேன். ஐபிஎல் தொடரில் ஒரு ஆட்டத்தை மட்டுமே நான் விளையாட முடியாமல் இழப்பேன். மற்றபடி பெரும் பாலான ஆட்டங்களில் பங்கேற்க உள்ளேன். அநேகமாக தொடர் முழுவதுமே விளையாடுவேன்.
ஐபிஎல் ஏலத்தை இணைய தளத்தில் நேரடியாக பார்க்க முயற்சித்தேன். ஆனால் இணைய தளம் சரியாக வேலை செய்ய வில்லை. இதனால் டுவிட்டரில் பின் தொடர்ந்தேன். ஆனால் அதிகளவிலான பதிவுகள் இருந் ததால் கடினமாக இருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் பார்த்து முடித்து உறங்க செல்வதற்கு அதிகாலை 3.30 மணி ஆகி விட்டது. இதனால் கூடுதலாக ஒரு மணிநேரம் உறங்கினேன்.
இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.