Last Updated : 19 Mar, 2017 10:44 AM

 

Published : 19 Mar 2017 10:44 AM
Last Updated : 19 Mar 2017 10:44 AM

கோலியை கிண்டலடித்த மேக்ஸ்வெல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடரில், இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் கிண்டலடிப்பது தொடர்ந்து வருகிறது.

கடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்மித், இஷாந்த் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருவரை ஒருவர் மைதானத்தில் கிண்டலடித்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், கோலியைப் போல நடித்துக் காட்டி கிண்டலடித்தார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தாவிப் பிடிக்க முயன்ற கோலி, கீழே விழுந்ததில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் மேற்கொண்டு பீல்டிங்கில் ஈடுபடவில்லை. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை டைவ் செய்து பிடித்த மேக்ஸ்வெல், பின்னர் கோலியைப் போன்று தன் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வலிப்பது போல் நடித்து அவரை கேலி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x