Published : 07 Mar 2017 11:45 AM
Last Updated : 07 Mar 2017 11:45 AM

பெங்களூரு டெஸ்ட்: ஆஸிக்கு இலக்கு 188

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 187 ரன்கள் முன்னிலையுடன் முடித்தது. மொத்தம்274 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

213 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணியின் ரஹானே, புஜாரா இருவரும் நம்பிக்கையளிக்கும் வகையில் 4வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ரஹானே 128 பந்துகளில் அரை சதம் தொட்டார். மறுமுனையில் புஜாராவும் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி அரும்பாடு பட்டது. இந்தியா 238 ரன்கள் எடுத்திருக்கும் போது ஸ்டார்க் வீசிய ஓவரில் ரஹானே, கருண் நாயர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்த ஓவரிலேயே புஜாராவும், அஸ்வினும் ஆட்டமிழக்க 246 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என இரண்டே ஓவர்களில் ஆட்டத்தின் நிலை மாறியது. தொடர்ந்து உமேஷ் யாதவ் 1 ரன்னுக்கு வீழ்ந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு சாஹாவும், இஷாந்த் சர்மாவும் களத்தில் இணைய, சாஹா சற்று தாக்குப்பிடிக்க முயற்சித்தார். சாஹா 20 ரன்கள் எடுத்திருக்க சர்மா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தியா 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x