

மல்யுத்த அகாடமி அமைப்பதற்காக மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு 8 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளது ஹரியாணா மாநில அரசு. ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற வீரரான சுஷில் குமாருக்கு ஏற்கெனவே நிலம் ஒதுக்கித் தருவதாக ஹரியாணா மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி இப்போது நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுஷில் குமார், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.