

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள நியூஸிலாந்து அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஜெஸ்ஸி ரைடர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நியூஸி. தேர்வுக்குழு தலைவர் புரூஸ் எட்கர் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் ரைடருக்கு உறுதியாக இடம் இருந்தது. எனினும் அவர் தனது மோசமான நடத்தை காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஏனெனில் எங்களுடைய அணித் தேர்வு நடைமுறையில் நன்னடத்தை மிக முக்கியமானது.” என்றார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
அணி விவரம்: பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரே ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், ஆன்டன் டேவ்சிச், மார்ட்டின் கப்டில், ரோனீல் ஹிரா, மிட்செல் மெக்லீனாகான், நாதன் மெக்கல்லம், கெய்ல் மில்ஸ், காலின் மன்றோ, ஜேம்ஸ் நீஷாம், லியூக் ரோஞ்சி, டிம் சௌதி, ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன்.