Last Updated : 26 May, 2017 09:41 AM

 

Published : 26 May 2017 09:41 AM
Last Updated : 26 May 2017 09:41 AM

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா - சீனா இன்று மோதல்

ஆஸ்திரேலியாவின் கோஸ்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் இந்தியா இன்று சீன அணியுடன் மோதுகிறது.

சுதிர்மான் கோப்பையில் இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2011-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேறியிருந்தது. அப்போது இந்திய அணி சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

தற்போது 2-வது முறையாக கால் இறுதியில் விளையாட உள்ளது. இந்த முறையும் இந்திய அணி சீன அணியுடனே பலப்பரீட்சை நடத்துகிறது. டி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி லீக் சுற்றில் டென்மார்க்கிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தோனேஷியாவை வீழ்த்தியி ருந்தது.

அதேவேளையில் இந்தோனே ஷியா தனது கடைசி ஆட்டத் தில் டென் மார்க்கிடம் தோல்வி யடைந்ததால் இந்திய அணிக்கு நாக் அவுட் சுற்றில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. சுதிர்மான் கோப்பை வரலாற்றில் இந்தோனே ஷிய அணி கால் இறுதிக்கு முன்னே றாமல் வெளியேறுவது இதுவே முதன்முறை.

இன்று நடைபெறும் கால் இறுதியில் சீன அணி வலுவாக களமிறங்குகிறது. அந்த அணியில் இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டான், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷென் லாங் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவுக்கும் கடும் சவால் காத்திருக்கிறது. அவர் 7-ம் நிலை வீராங்கனையான ஹி பிங்ஜியோ அல்லது 6-ம் நிலை வீராங்கனையான சன் யூ உடன் மோத உள்ளார்.

5-ம் நிலை வீராங்கனையான சிந்து, கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி யில் ஹி பிங்ஜியோவிடம் தோல்வி யடைந்திருந்தார். அதேவேளை யில் சன் யூக்கு எதிராக 7 ஆட்டத்தில் விளையாடி 3 முறை வெற்றி கண்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற துபை உலக சூப்பர்சீரிஸ் பைனல்ஸில் சிந்துவை சன்யூ வீழ்த்தியிருந் தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஷென் குயிங்ஷென், ஜியா யீபன் ஜோடியும் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி வலுவாக உள்ளது.

இந்த ஜோடி, 2-ம் நிலை ஜோடியான லு ஹாய், ஹுவாங் யாக்கியோன் ஜோடிக்கு சவால் தரக்கூடும். ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள லியு யூஷென், லி ஜுன்யூ ஜோடிஅல்லது ஜாங் நன், ஹைபெங் ஜோடியுடன் இந்தியாவின் சுமித் ரெட்டி, மனு அட்ரி ஜோடி மோதுகிறது.

கடந்த ஆண்டு ஹைதராபாத் தில் நடைபெற்ற ஆசிய அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி, சீனாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்தது. அதேபோன்று இம்முறையும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி அடுத்து சுற்றில் கால் பதிக்கலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x