பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 4-வது சுற்றில் நடால், முகுருசா - லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 4-வது சுற்றில் நடால், முகுருசா - லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி
Updated on
1 min read

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி யில் ரபேல் நடால், கார்பைன் முகுருசா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வியடைந்தது.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-0, 6-1, 6-0 என்ற நேர் செட்டில் 63-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிகோலொஸ் பஸிலாஷிவிலியை வீழ்த்தினார்.

10-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், அர்ஜென்டினாவின் ஹோராசியோவை எதிர்த்து விளையாடினார். இதில் டேவிட் கோபின் முதல் செட்டில் 5-4 என முன்னிலை வகித்த போது காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ஹோராசியோ 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

13-ம் நிலை வீரரான பல்கேரி யாவின் டிமிட்ரோவ் 5-7, 3-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் கார்ரேனோ பஸ்டாவிடம் தோல்வி யடைந்தார். 6-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-1, 7-6, 6-3 என்ற நேர் செட்டில் 25-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான்சனை வீழ்த்தினார்.

முகுருசா

5-ம் நிலை வீரரான கடனாவின் மிலோஸ் ரயோனிச், ஸ்பெயின் வீரர் கார்சியா லோபஸை எதிர்த்து விளையாடினார். இதில் ரயோனிச் 6-1, 1-0 என முன்னிலை வகித்த போது காயம் காரணமாக லோபஸ் வெளியேறினார். இதனால் ரயோனிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னும் 4-ம் நிலை வீராங்கனையுமான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 27-ம் நிலை வீராங்கனையான கஜகஸ் தானின் யூலியாவை வீழ்த்தினார்.

பயஸ் ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், புரவ் ராஜா ஜோடி 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மாராச், குரோஷியாவின் மேட்பாவிச் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னே றியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி 6-7, 2-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் மார்ரிரோ, ரோப்ரிடோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் குவாஸ் ஜோடி 5-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் இஸ்தோமின், பிலிப்பைன்சின் டிரீட் ஹ்யூ ஜோடியை வீழ்த் தியது.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தங்களது முதல் சுற்றில் 4-6, 6-1, 2-10 என்ற செட் கணக்கில் தென் ஆப்ரிக்காவின் கிளாசன், சுலோவேனியாவின் செர்போட்னிக் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in