டேவிஸ் கோப்பை அரை இறுதியில் ஆன்டி முர்ரேவை வீழ்த்திய டெல் போட்ரோ

டேவிஸ் கோப்பை அரை இறுதியில் ஆன்டி முர்ரேவை வீழ்த்திய டெல் போட்ரோ
Updated on
1 min read

டேவிஸ் கோப்பை டென்னிஸில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோ வீழ்த்தினார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி அரை இறுதியில் இங்கிலாந்து-அர்ஜென்டினா அணிகள் மோதி வருகின்றன. கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவு ஆட்டத் தில் 2-ம் நிலை வீரரான இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை எதிர்த்து டெல் போட்ரோ மோதினார்.

5 மணி நேரம் 7 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 5-7, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டெல் போட்ரோ வெற்றி பெற்றார். இதன் மூலம் டேவிஸ் கோப்பையில் தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் அசத்திய ஆன்டி முர்ரேவின் வெற்றி களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

மேலும் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் முர்ரேவிடம் அடைந்த தோல்விக்கு டெல்போட்ரா பழிதீர்த்துக்கொண்ட விதமாகவும் இந்த ஆட்டம் அமைந்தது. இருவரது டென்னிஸ் வாழ்க்கையிலும் அதிக நேரம் விளையாடிய ஆட்டமாகவும் இது அமைந்திருந்தது.

மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் குயிடோ பெல்லா 6-7, 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எட்மன்டை வீழ்த்தினார். இதன் மூலம் அர்ஜென்டினா 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரட்டையர் பிரிவில் அர்ஜென்டினா அணி மேலும் ஒரு வெற்றியை வசப் படுத்தும் நிலையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேறும்.

2011-ம் ஆண்டுக்கு பின்னர் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 15 ஆண்டுகளாக டேவிஸ் கோப்பை யில் விளையாடி வரும் அர்ஜென்டினா 11 முறை அரை இறுதி வரை முன்னேறி உள்ளது. 1981, 2006, 2008, 2011-ம் ஆண்டு களில் 2-வது இடத்தை பிடித்தி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in