நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன்

நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன்
Updated on
1 min read

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ராமன் சிறப்பாக செயல்பட்டவர். மேலும் தமிழகம், பெங்கால் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தவர். அவரின் பயிற்சியின்கீழ் அந்த அணிகள் வெற்றிகளைக் குவித்துள்ளன. அவரை எங்களின் பயிற்சியாளராக நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். டிரேவர் பேலிஸ், வாசிம் அக்ரம், விஜய் தாஹியா ஆகியோருடன் ராமனும் இணைந்து செயல்படுவார். ஈடன் கார்டனில் பெங்கால் அணிக்கு அவர் பயிற்சியளித்தவர். அவரின் அனுபவம் வரும் சீசனில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் பங்கர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உதவிப் பயிற்சி யாளராக முன்னாள் ஆல் ரவுண்டரான சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே அணியின் முன்னாள் கேப்டனான பங்கர், ரஞ்சிப் போட்டியில் ரயில்வே அணி ஏராளமான வெற்றிகளைக் குவித்ததற்கு முக்கியப் பங்கு வகித்தவர்.

இது தொடர்பாக சஞ்சய் பங்கர் கூறுகையில், “இந்த ஆண்டில் புதிய அணியைப் பெறுவது சுவாரஸ்யமானது. வரும் ஐபிஎல் போட்டிக்காக வீரர்களை தயார் செய்வது சவாலான பணியாகும். அணியுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in