

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் செவ்வாய்க்கிழமை மதியம் கொச்சி வந்தனர்.
இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் முதல் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் விளையாடுவதற்காக இரு அணிகளும் செவ்வாய்க்கிழமை மதியம் கொச்சி வந்து சேர்ந்தன.
கேரளத்தின் பாரம்பரிய கலையான மோஹினியாட்டம் மற்றும் கதகளி நடனக் குழுவினர் இரு அணி வீரர்களையும் வரவேற்றனர்.
இரு அணி வீரர்களும் இன்று தங்களின் பயிற்சியைத் தொடங்குகின்றனர். போட்டி நடைபெறவுள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள பெவிலியனுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதை இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது.