

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் 30 வயது மெக்கானிக்கல் இன்ஜினியர் உபேந்திர நாத் பிரம்மச்சாரி என்பவர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு ருசிகர விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.
பிரம்மச்சாரி ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அவர் அனுப்பியுள்ள சுயவிவரத்தில் ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள் இருந்ததாகத் தெரிகிறது. அதில் அவர் குறிப்பிடும் போது, “லெஜண்டரி கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ராஜினாமாவுக்குப் பிறகு நான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்திய கேப்டன் கோலிக்கு ஒரு லெஜண்ட் பயிற்சியார் தேவையில்லை.
கிரிக்கெட் ஆலோசனை குழு முன்னாள் வீரர் ஒருவரை மீண்டும் பயிற்சியாளராக நியமித்தால் அவரையும் கோலி புண்படுத்தி வெளியேறச்செய்வார்.
ஆகவே கேப்டனின் பிடிவாதப் போக்கிற்கு நான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு மெதுவே அவரை வழிக்குக் கொண்டு வருவேன். அதன் பிறகு பிசிசிஐ இன்னொரு லெஜண்டை பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கலாம்” என்று தான் அனுப்பிய சுய-விவரத்தில் கூறியுள்ளார்.