Last Updated : 18 Jul, 2016 10:33 AM

 

Published : 18 Jul 2016 10:33 AM
Last Updated : 18 Jul 2016 10:33 AM

குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம்: விஜேந்தர் சிங்குக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

குத்துச்சண்டையில் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்குக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியன் பட்டத்துக்கான குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் இந்திய வீரர் விஜேந்தர் சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி னார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவரை வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விஜேந்தர் சிங் தனது வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்பட வைத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கடுமையாக போராடி தகுதியான வெற்றியைப் பெற்றதற்காக விஜேந்தர் சிங்கை பாராட்டுகிறேன். உங்கள் திறமை, வலிமை ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணியின் கேப்ட னான தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்தர் ஷேவாக், வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் விஜேந்தர் சிங்கை வாழ்த்தியுள்ளனர்.

முகமது அலிக்கு சமர்ப்பணம்

முன்னதாக இந்த குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு விஜேந்தர் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

இப்போட்டியில் நான் அடைந்த வெற்றியை மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன். தொழில்முறை குத்துச்சண்டையில் என் அடுத்த போட்டிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளன. அதனால் நான் ஒரு மாதம் ஓய்வெடுக்க உள்ளேன்.

என்னுடன் குத்துச்சண்டை போட்டியில் மோத விரும்பு வதாக பாகிஸ்தான் குத்துச் சண்டை வீரர் அமிர் கான் கூறியுள் ளார். நாங்கள் இருவரும் வேறு வேறு எடைப்பிரிவில் இருக்கி றோம். அதனால் நாங்கள் குத்துச் சண்டையில் மோத வேண்டு மானால் ஒன்று அவர் தனது உடல் எடையைக் கூட்டவேண்டும். அல்லது நான் என்னுடையை எடையை குறைக்கவேண்டும். அப்படி நாங்கள் இருவரும் எடையை சமப்படுத்தி மோதுவ தாக இருந்தால், அந்த போட்டி இந்தியாவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

குத்துச்சண்டை வீரர்களுக் கான தரவரிசையில் நான் இப் போது முதல் 15 இடங்களுக்குள் இருப்பேன். அதனால் இனிவரும் போட்டிகள் கடுமையானதாக இருக்கும். அவற்றை எதிர்கொள்ள தீவிர பயிற்சிகளை மேற்கொள்வேன்.இவ்வாறு விஜேந்தர் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x