களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித்

களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சமீப காலமாக களத்தில் அமைதியாக இருக்கின்றனர், இது சரிபட்டு வராது, பழைய பாணி ஆக்ரோஷம் தேவை என்று கேட்பன் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையில் நெஞ்சை நிமிர்த்தி எதிரணியினரை சீண்டும் பழைய பாணி கிரிக்கெட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் டேவிட் வார்னர் வெளிப்படையாக தனது ஆக்ரோஷத்தை உடல்மொழியில் தெரிவித்தார், அத்தகைய ஆற்றல் மற்ற வீரர்களிடத்திலும் தேவை.

தற்போது அணியில் அமைதியான சில வீரர்கள் இருக்கின்றனர், தென் ஆப்பிரிக்க தொடர் இருக்கும் நிலையில் ஆக்ரோஷமான ஆற்றலையும் உடல் மொழியையும் வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அத்தகைய ஆக்ரோஷம் இல்லை. இதனால்தான் வாய்ப்புகளைக் கூட தவற விட்டதாக நான் கருதுகிறேன். சில கேட்ச்களை விட்டோம், ஒட்டுமொத்தமான அணுகுமுறையில் ஆக்ரோஷம் கொஞ்சம் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இப்படி அமைதிகாத்தால் கடினம்தான். சொற்கள் அளவில் பெரிய அளவில் நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், நம் இருப்பை வேறு வேறு விதமாக காண்பிக்க வேண்டும், பழைய ஆஸ்திரேலிய அணியினர் பாணியில் களத்தில் நெஞ்சை நிமிர்த்துவது போன்ற செயல்கள் கொஞ்சம் ஆற்றலை அதிகப்படுத்தும்.

இவ்வாறு வீரர்களைத் தூண்டியுள்ளார் ஸ்மித்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in