சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக என். சீனிவாசன் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக என். சீனிவாசன் தேர்வு
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என். சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பாக செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடைபெற்றது. இக்கவுன்சிலின் தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் வரும் ஜூன் மாதம் முதல் பொறுப்பேற்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளின் ஆதரவுடன் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த மறுசீரமைப்பு ஒப்புதல் மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவிற்கு கூடுதல் அதிகாரமும், நிதியும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in