

தேசிய கபடி இறுதியாட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தேசிய அளவிலான கபடி போட்டிகள் புதுவையில் புதன்கிழமை தொடங்கியது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அணிகள் பங்கு பெறும் இந்த கபடி போட்டியில் நாடு முழுவதுமிருந்து 21 மாநில விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு நடந்த இறுதி போட்டியில் சென்னை அணி பெங்களூரை (29-8) வென்று சாம்பியனானது. 3-ம் இடத்துக்கான போட்டியில் மும்பை அணி ஹரியானாவை 24-22 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் தலைமை வகித்தார்.