Published : 25 Nov 2013 02:53 PM
Last Updated : 25 Nov 2013 02:53 PM

தென் ஆப்பிரிக்கா தொடரில் ஜாகீர் சேர்ப்பு; ராயுடுக்கு வாய்ப்பு

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். 17 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பாதி ராயுடு அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், இந்திய டெஸ்ட் அணியில் கவுதம் கம்பீர் சேர்க்கப்படவில்லை.

அணி விவரம்:

டெஸ்ட் அணி: தோனி (கேப்டன்), முரளி விஜய், தவாண், புஜாரா, கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, அஸ்வின், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான், அம்பாதி ராயுடு, சஹா, இஷாந்த் சர்மா மற்றும் ஓஜா.

ஒருநாள் அணி: தோனி (கேப்டன்), தவாண், சுரேஷ் ரெய்னா, கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, யுவராஜ் சிங், அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, ஜாகீர் கான், அம்பாதி ராயுடு, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அமித் மிஸ்ரா.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட்களில் இந்தியா பங்கேற்கிறது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே டிசம்பர் 5, 8, 11 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டியும், டிசம்பர் 18-22, டிசம்பர் 26-30 ஆகிய தேதிகளில் டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x