2024-ல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால் ரோம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: இத்தாலி கிரிக்கெட் சங்க தலைவர் உறுதி

2024-ல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால் ரோம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: இத்தாலி கிரிக்கெட் சங்க தலைவர் உறுதி
Updated on
1 min read

ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. அடுத்த ஒலிம்பிக் தொடர் 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடத்தப்படுகிறது.

அதன்பின் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரை நடத்தும் உரிமையை பெறும் போட்டியில் இத்தாலியின் ரோம், பிரான்ஸின் பாரிஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை ரோம் நகரம் பெற்றால் அதில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படும் என இத்தாலி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் கிரிக்கெட் சங்க தலைவர் சிமோன் காம்பினோ கூறும்போது, “ரோம் நகரம் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை பெற்றால், கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும். இந்த விஷயத் தில் ஒருங்கிணைப்பு குழு உறுதியான ஈடுபாட்டுடன் உள்ளது” என்றார்.

சுவிட்சர்லாந்தின் எடின்பர்க் நகரில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் காம்பினோ கலந்து கொண்டுள்ள நிலை யில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் புதிய விதிமுறைப்படி போட்டியை நடத்தும் நகரம் விதிமுறைகளுக்குட்பட்டு ஐந்து போட்டிகளை ஒலிம்பிக் தொடரில் சேர்க்கலாம். இதனால் இத்தாலி, கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய் துள்ளது.

இத்தாலியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதாக இருந்தால், போலோக்னா நகரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். ஏற்கெனவே இங்கு உலக கிரிக்கெட் லீக் டிவிஷனின் நான்கு போட்டிகள் 2010-ம் ஆண்டு நடந்துள்ளன.

12 அணிகள் இந்த தொடரில் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்து 3 அணிகள், ஆசியாவில் இருந்து 3 அணிகள், ஆப்ரிக்காவில் இருந்து 2 அணிகள், அமெரிக்காவில் இருந்து 2 அல்லது 3 அணிகள், கரீபியனில் இருந்து 1 மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் இருந்து 2 அல்லது 3 அணிகள் தேர்வாகக்கூடும். தற்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற இருக்கிறது. இதனால் இங்கிலாந்து பங்கேற்பது சந்தேகம்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in