

புயர்டோ ரிகோ அணிக்கு எதிரான நட்புரீதியிலான கால்பந்து போட்டி யில் விளையாடும் இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையேயான நட்புரீதியிலான ஆட்டம் வரும் செப்டம்பர் 3-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. 61 வருடங்களுக்கு பிறகு மும்பையில் தற்போதுதான் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக இங்கு 1955-ம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்றது.
மேலும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் கூட்டமைப்பை சேர்ந்த நாடு ஒன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விளையாடுவதும் இதுவே முதன்முறை. புயர்டோ ரிகோ அணி பிபா கால்பந்து தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் இந்தியா 152-வது இடம் வகிக்கிறது.
இந்த ஆட்டத்துக்கான 28 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த வீரர்கள் அனைவரும் மும்பையில் 29-ம் தேதி தொடங்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய உத்தேச அணி விவரம்:
கோல்கீப்பர்கள்:
சுப்ரதா பால், குர்பீரித் சிங் சாந்து, அம்ரிந்தர் சிங்
தற்காப்பு வீரர்கள்:
ரினோ ஆன்டோ, சந்தேஷ் ஜின்ஹன், அர்னாப் மோன்தால், ஹீகன் பெரேரா, சிங்கலென்ஷனா சிங், பிரிதம் கோதல், நாராயணன் தாஸ், கார்டோஸா.
நடுக்கள வீரர்கள்:
வினித் ராய், இஜென்சன், தனபால் கணேஷ், பிரனோய் ஹல்டெர், ஜாக்கிசந்த் சிங், ஐசக், பைகாஷ் ஜெய்ரு, உடான்டா சிங், ஹலிச்சரண் நார்ஸாரி, ரவுலின் போர்க்ஸ், ஆல்வின் ஜார்ஜ், ஜெர்மன் பிரீத் சிங், ரபீக், அர்ஜுன் டுடு.
முன்கள வீரர்கள்: சுனில் ஷேத்ரி, ஜிஜி, சுமித் பாஸி.