10 ஐபிஎல் தொடர்களிலும் நான் பார்த்ததில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்: ரிஷப் பந்த் குறித்து சச்சின் பெருமிதம்

10 ஐபிஎல் தொடர்களிலும் நான் பார்த்ததில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்: ரிஷப் பந்த் குறித்து சச்சின் பெருமிதம்
Updated on
1 min read

6 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 43 பந்துகளில் 97 ரன்களை விளாசி டெல்லி அணியை நம்ப முடியாத வெற்றிக்கு இட்டுச் சென்ற ரிஷப் பந்த் ஆடிய இன்னிங்ஸ் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரையே வீழ்த்திவிட்டது.

இந்நிலையில் இந்தியாவின் வருங்கால நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் ரிஷப் பந்த் ஆடிய அந்த இன்னிங்ஸ் பற்றி முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்: 10 ஐபிஎல் போட்டிகளையும் உள்ளடக்கிக் கூறுகிறேன், நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ்.

சேவாக்: தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பேட்ஸ்மெனை நேசிக்கிறேன். நம்பிக்கையுடன் பந்தை அடிப்பதற்கான சிறப்புத் திறமையும் கைகூடியுள்ளது. இன்று ரிஷப் பந்த்திடமிருந்து கூடுதல் சிறப்பு வெளிவந்துள்ளது.

ஹர்பஜன் சிங்: என்னவொரு திறமை; இளம் அழகே! டாப் டாப் டாப்.

டாம் மூடி: இதைவிட சிறப்பாக ஆட முடியாது

ஜோஸ் பட்லர்: இவர் ஆடுவதைப் பார்க்க பிடிக்கிறது, என்னவொரு திறமை...

கங்குலி: ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன். இவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். இவர்கள் இருவருமே ஸ்பெஷல்.

கவுதம் கம்பீர்: இளமையின் புத்துணர்ச்சி, ஆனால் மூத்தோரின் அமைதி! என்னவொரு கூட்டணி! வாழ்த்துக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in