ஆந்திர மாநில அரசு சார்பில் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு

ஆந்திர மாநில அரசு சார்பில் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன், இந்தோனேஷி ஓபன் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சூப்பர் சீரிஸ் தொடரில் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்காக விஜயவாடாவில் உள்ள தும்மல பல்லி கலையரங்கில் ஆந்திர அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “கடந்த ஆண்டு இதே இடத்தில் இறகு பந்து போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தற்போது கிடாம்பி ஸ்ரீகாந்துக்கும் இதே இடத்தில் பாராட்டு விழா நடத்துவது பெருமையாக உள்ளது. இவர்களை முன்னுதாரணமாக கொண்டு மேலும் பலர் விளையாட்டு துறையில் சாதனை படைக்க வேண்டும்” என்றார்.

பின்னர், ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகைக்கான காசோலையை முதல்வர் வழங் கினார். மேலும் 1,000 கஜம் வீட்டு மனைப்பட்டா, குரூப் 1 அரசு வேலை ஸ்ரீகாந்துக்கு வழங்கப் படும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஸ்ரீகாந்தின் பயிற்சி யாளர் கோபிசந்துக்கும் ரூ.15 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in