Published : 04 Apr 2017 10:11 AM
Last Updated : 04 Apr 2017 10:11 AM

அரை இறுதியில் இந்திய அணி

மகளிர் ஹாக்கி உலக லீக் இரண்டாவது சுற்று தொடரில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

கனடாவின் மேற்கு வான் கூவரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இந்திய அணி, பெல்லாரசை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

26-வது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா பீல்டு கோல் அடித்து அசத்தினார். 58-வது நிமிடத்தில் பெல்லாரஸ் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை அருமையாக இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதா தடுத்தார். முடிவில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x