

இந்திய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சரத் கமலை எதிர்த்து ஜப்பானை சேர்ந்த 13 வயது சிறுவனான டொமொகாசு ஹோரிமோடோ ஆடினார்.
டேபிள் டென்னிஸ் போட்டியின் ஜூனியர் பிரிவில் நடப்பு சாம்பியனான டொமொகாசு, இப்போட்டியில் தனது அசாத்தியமான வேகத்தின் மூலம் சரத் கமலை மிரள வைத்தார். தனது துடிப்பான ஆட்டத்தால் 11 7, 5 11, 11 7, 11 13, 11 9, 11 9 என்ற செட்கணக்கில் சரத் கமலை வீழ்த்தினார். இதன் மூலம் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறினார்.