

தெற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் கோப்பைக்கான இறுதிப் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இப்பாட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சுபேர் அமீரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் அடுத்த ஒரு நிமிடத்துக்குள் சுனில் செட்ரி பாஸ் செய்த பந்தை கோலுக்குள் திணித்து இந்திய வீரர் ஜீஜே ஆட்டத்தை சமன் செய்தார். இதைத்தொடர்ந்து ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தின்போது வழங்கப்பட்ட ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்த சுனில் செட்ரி, இந்திய அணிக்கு 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி தேடித்தந்தார்.