சென்னை ஓபன் டென்னிஸ் இறுதியில் அகுட் - மேட்வேதேவ் இன்று பலப்பரீட்சை

சென்னை ஓபன் டென்னிஸ் இறுதியில் அகுட் - மேட்வேதேவ் இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

6-வது நாளான நேற்று ஒற்றை யர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 96-ம் நிலை வீரரான இஸ்ரேலை சேர்ந்த டுடி செலா, 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மேட்வே தேவ்வை எதிர்த்து விளையாடி னார். தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய டுடி செலா முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.

2-வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த மேட்வேதேவ் இந்த செட்டை 7-6 என தன்வசப்படுத்தி னார். இதனால் வெற்றியை தீர் மானிக்கும் 3-வது செட் விறுவிறுப் பானது. இந்த செட்டில் தொடக் கத்தில் இருந்தே மேட்வேதேவ்வின் கையொங்கியது. இதனால் இந்த செட்டை அவர் 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

முடிவில் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மேட்வேதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று இறுதி போட்டி

மற்றொரு அரை இறுதியில் உலக தரவரிசையில் 14-வது இடமும் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயி னின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகுட், உலக தரவரிசையில் 47-ம் இடமும் போட்டி தரவரிசையில் 5-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேர் உடன் மோதி னார்.

இதில் அகுட் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னாறினார். பட்டம் வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் இன்று ராபர்ட்டோ பவுதிஸ்டா அகுட் - டேனில் மேட்வேதேவ் பலப்பரீட்சை நடத்து கின்றனர்.

2014-ம் ஆண்டு தொழில்முறை போட்டிகளில் களமிறங்கிய மேட்வேதேவ் இதுவரை ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதில்லை. 331-வது இடத்தில் இருந்த அவர் கடந்த இரு ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தால் முதல் 100 இடங்களுக்குள் வந்தார். இன்றைய இறுதிப் போட்டி அவருக்கு மிகுந்த சவாலாகவே இருக்கும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in