சென்னையில் தொடரும் மழை: சென்னை – கேரளா கால்பந்து போட்டி நடப்பது சந்தேகம்

சென்னையில் தொடரும் மழை: சென்னை – கேரளா கால்பந்து போட்டி நடப்பது சந்தேகம்
Updated on
1 min read

சென்னையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையின் எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான இண்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தை இன்று இரவு 7 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடத்தப்பட்டு வரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்திய கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சர்வதேச கால்பந்து வீரர்களுடன், உள்ளூர் வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இது இந்தியாவில் கால்பந்துக்கு புத்துயிர் ஊட்டும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் ஆட்டம் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்றும் மழை தொடரும் பட்சத்தில் அப்போட்டி நடைபெறாது. இது சென்னை கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் எப்.சி அணி முதல் ஆட்டத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. இப்போது தொடர்ந்து 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தொடக்க போட்டியில் 0–1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் கேரளா அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in