இங்கிலாந்து அணியை எளிதாக எடைபோட வேண்டாம்: ஏ.பி.டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

இங்கிலாந்து அணியை எளிதாக எடைபோட வேண்டாம்: ஏ.பி.டிவில்லியர்ஸ் எச்சரிக்கை
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்துக்கும் இடமுண்டு எனவே குறைவாக எடைபோட வேண்டாம் என்று தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வெல்வது இதனால் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் டிவில்லியர்ஸ்.

இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து ஒருநாள் அணி பிப்ரவரி 2016-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை 2-3 என்று இழந்த பிறகே 6 ஒருநாள் தொடர்களில் 5-ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகளுக்கு ஒயிட் வாஷ் தோல்வியை அளித்து வலுவாக உள்ளது. இதனையடுத்து டிவில்லியர்ஸ் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வெல்ல விரும்புகிறோம். தங்கள் நாட்டில் சிறந்த ஒருநாள் போட்டி வெற்றிகளை இங்கிலாந்து அணி பெற்று வருகிறது.

2015 உலகக்கோப்பை தோல்விகளுக்குப் பிறகே இங்கிலாந்து அணி மீண்டெழுந்து பெரிய சக்தியாக விளங்குகிறது. இந்த இங்கிலாந்து அணி திறமை வாய்ந்தது, தங்கள் அணி மீதான மரியாதையை அதிகரித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வெல்லும் அணிகளில் இங்கிலாந்தும் உள்ளது, எனவே குறைத்து எடைபோட முடியாது, இந்தியா கடந்த முறை வென்றது, ஆஸ்திரேலியாவும் இம்முறை கோப்பையை வெல்ல போராடும்.

இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in