Published : 27 Jan 2017 05:42 PM
Last Updated : 27 Jan 2017 05:42 PM

கிளப் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகள்: ஆஸ்திரேலிய பவுலரின் கனவுச் சாதனை

ஆஸ்திரேலியாவின் கிளப் அணியான கோல்டன் பாயிண்ட் கிரிக்கெட் கிளப் பவுலர் அலெத் கேரே என்ற பவுலர் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை புரிந்துள்ளார்.

29 வயதான கேரே பலாரத் கிரிக்கெட் அணிக்கு எதிராக 2 நாள் போட்டி ஒன்றில் ஆடும்போது முதல் 8 ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை.

ஆனால் 9-வது ஓவரில் வரலாறு நிகழ்த்தப்படவுள்ளது பற்றி அவரே கூட அறிந்திருக்கவில்லை. 9-வது ஓவரில் முதல் பந்தில் ஸ்லிப் கேட்ச் ஆனது. 2-வது பந்தில் விக்கெட் கீப்பர் கேட்ச் ஆனது. 3-வது பந்து எல்.பி. ஆனது. ஹாட்ரிக் கொண்டாட்டம் நிகழ்த்தப்பட்ட போது இன்னொரு ஹாட்ரிக் காத்திருக்கிறது என்பதை கோல்டன் பாயிண்ட் வீரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அடுத்த 3 பந்துகளிலும் எதிரணி வீரர்கள் 3 பேர் பவுல்டு ஆகி வெளியேற, ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகள் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

எந்த மட்ட கிரிக்கெட்டிலும் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகள், அதுவும் ஒரே ஓவரில் என்பது சாத்தியமா என்பது கேள்வியே. எதிரணியினர் 40 ரன்களுக்குச் சுருண்டனர். கேரே 9 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தச் சாதனை குறித்து கோல்டன் பாயிண்ட் கிளப் செயலர் ஜான் ஓகில்வி பிபிசி ஸ்போர்ட்டில் கூறும்போது, “மிகச்சிலரே மைதானத்தில் இந்தப் போட்டியை பார்த்தனர். இந்த ஓவரில் சிறப்பான சாதனை ஒன்று நிகழ்த்தப்படவுள்ளது என்பதை எப்படியோ உணர்ந்தவ பார்வையாளர்கள் அலெத் கேரேயின் 5 மற்றும் 6-வது விக்கெட்டைப் பதிவு செய்தனர். இந்தப் பந்தை நாங்கள் பாதுகாத்து வைத்துள்ளோம்.

இவரது இந்த ஒரே ஓவர் 6 விக்கெட் சாதனை ஆஸ்திரேலியா நெடுகவும் பரவி பிரபலமாகியுள்ளார் அலெத் கேரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x