Last Updated : 14 Jun, 2017 10:11 AM

 

Published : 14 Jun 2017 10:11 AM
Last Updated : 14 Jun 2017 10:11 AM

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு சாய்னா, பி.வி.சிந்து முன்னேற்றம்

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 12-ம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், போட்டி தரவரிசையில் 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக் இன்ட னானை எதிர்த்து விளையாடினார்.

இதில் சாய்னா முதல் செட்டில் 10-4 என முன்னிலை வகித்தார். ஆனால் இன்டனான் வலுவாக மீண்டெழுந்து இந்த செட்டை 21-17 என கைப்பற்றினார்.

2-வது செட்டில் சாய்னாவுக்கு 16-15 என மிக நெருக்கமாக இன்டனான் நெருக்கடி கொடுத்தார். எனினும் சாய்னா சீராக புள்ளிகள் சேர்த்து இந்த செட்டை 21-18 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் சாய்னா ஆதிக்கம் செலுத்த இந்த செட் 21-12 என அவர் வசமானது.

முடிவில் சாய்னா 17-21, 21-18, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 57 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் சோசூவாங்கை எளிதாக வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சுமித் ரெட்டி ஜோடி 12-21, 9-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் இர்பான் பாத்ஹிலாஹ், வெனி அங்ராயினி ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்த ஆட்டம் வெறும் 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x